[Welcome to the Sri Vaishnava Network] Sri Vaishnava Network
In the service to the Lotus feet of Sriman Narayana...

Monday, June 06, 2016

விழுப்புரம் லட்சுமி நாராயணப் பெருமாள்

உங்கள் மகன் மற்றும்  மகளுக்கு மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெற வேண்டுமா ?  இத்தலத்திற்கு செல்லுங்கள்!

விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு

இக்கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமையன்று மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால், மூன்றே மாதத்தில் திருமண யோகம் வரும் என்கின்றனர்.

தல வரலாறு:
சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.
தற்போதுள்ள கோவில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனது.
கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, லட்சுமி தாயாரை வலது மடியில் தாங்கியபடி காட்சி தருகிறார்.
தாயார் வலக்கையால் பெருமாளை அணைத்த படியும், இடக்கையில் தாமரை மலரை ஏந்தியும் இருக்கிறார்.
கருவறை எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.
அர்த்தமண்டபத்தில் கனகவல்லி தாயார் சன்னிதி உள்ளது.
கோதண்டராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.
எலுமிச்சை மரமே இங்கு தல விருட்சம்.

பல்லி வழிபாடு:
அர்த்த மண்டபத்தின் விதானத்தில்
பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலுள்ள பல்லியைப் போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது.
இதை தொட்டு வணங்குவதன் மூலம் கிரகதோஷம், நோய் நொடி விலகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
மூலவர் லட்சுமி நாராயணர் சன்னிதியின் பின்புறம் நின்று பார்த்தால் மூலவர், தாயார், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகிய சன்னிதியின் விமானத்தையும் ஒருசேர தரிசிக்கலாம்.
மட்டைத் தேங்காய்:
பல காரணங்களால் திருமணம் தடைபட்டு நொந்து போய் உள்ளவர்கள், மட்டைத் தேங்காயை லட்சுமி நாராயணர் முன் வைத்து வழிபாடு செய்து எடுத்துச் செல்கின்றனர்.
இதனை வீட்டில் வைத்து தினமும் வழிபட்டால், மூன்று மாதத்திற்குள் திருமண யோகம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இங்குள்ள பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்கின்றனர்.
இருப்பிடம்:
விழுப்புரத்தில் இருந்து வளவனூர் 10 கி.மீ., இங்கிருந்து மடுக்கரை சாலையில் 5 கி.மீ.,

நேரம்: காலை 7.00 மணி- இரவு 8.00 மணி

அலைபேசி: 99428 39774, 82205 85308, 98423 98923

Labels:

Saturday, February 20, 2016

High Resolution Picture of Sri Ramar Pattabhishekam (for your Pooja Shelf)


Labels:

Monday, February 01, 2016

சுந்தர காண்டம்

Blossom1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது.
Blossom2. மஹான்ஒருவரிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே அந்த மஹான் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
Blossom3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
Blossom4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
Blossom5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
Blossom6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
Blossom7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
Blossom8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
Blossom9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
Blossom10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.
Blossom11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
Blossom12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
Blossom13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.
Blossom14. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
Blossom15. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.
Blossom16. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.
Blossom17. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
Blossom18. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
Blossom19. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.
Blossom20. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.
Blossom21. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.
Blossom22. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.
Blossom23. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
Blossom24. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
Blossom25. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.
Blossom26. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.
Blossom27. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
Blossom28. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.
Blossom29. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.
Blossom30. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
Blossom31. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
Blossom32. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.
Blossom33. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
Blossom34. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
Blossom35. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்Blossom

Sunday, January 03, 2016

Hanumath Jayanthi Celebrations in Ashok Nagar (Chennai)


Labels:

Friday, September 21, 2012

Sri Vaishnava Divyadesams website rejuvenated!

Sri Vaishnava Divyadesams, which started as my first and foremost realtime HTML learning project in 1998 and hosted with Angelfire (now Tripod Angelfire) as HTML pages now gets a facelift with HTML5.

I tried to keep the pages updated in Angelfire itself but Angelfire didn't support dynamic scripting support and also after lost password recovery, could not access Webshell. I had submitted a support ticket to them too but no response hitherto.

Anyways  instead of waiting indefinitely I just thought would grab a new host and upload the pages. Thanks to Zymic for generous PHP hosting.

Check out the new homepage here and do share your comments too.

Labels: ,

Friday, June 15, 2012

Sri Viswaroopa Lakshmi Narasimhar Website

Gratitude to Sri Lakshmi Narasimhan!

After eight months of wait, LN had been kind enough to grace LD to service Him through a simple development of His divine website kainkaryam. For some reason, whenever I took it up, something trivial and/or harrowing used to preempt the same and halt that endeavor.

You can find the newly launched website of Sri Viswaroopa Lakshmi Narasimhar over here. The website was rolled was public view two weekends back but this announcement post could again rolled out only now.

http://www.narahari.in/

It is powered by Wordpress. Feel free to send in your suggestions either through this post or through the Web Team of the website. 

Labels: ,

Friday, December 02, 2011

A Grand Sri Andal -- Sri Rangamannar Thirukkalyanam in Chennai

Thanks to Sri Ayodhyadasan Ramaswamy for sharing with me the news about a grand Sri Andal -- Sri Rangamannar Thirukkalyanam that is being organized in Chennai. I have created a Facebook event for the same at the URL below  so that people irrespective of their geographic positions and amidst their tight schedules can make their best efforts to attend the same and get the choicest blessings of Sri Andal.

Event URL: http://www.facebook.com/events/185041654922727/

Labels: